நிதி அமைச்சகம்

பெங்களூருவில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 13 JUL 2021 7:48PM by PIB Chennai

இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள இரண்டு வளாகங்களில் 2021 ஜூலை 8 அன்று ஆய்வு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு சலுகைகள் அளிக்கும் வருமான வரி சட்டம் 1961-ன் உட்பிரிவு 80 ஜேஜேஏஏ-வின் கீழ் அதிக அளவு வரி சலுகைகளை இந்நிறுவனம் பெற்று வந்தது.

ஆய்வு நடவடிக்கையின் போது, வரி ஏய்ப்பு தொடர்பாகவும், வருமான வரி சட்டம் 1961-ன் உட்பிரிவு 80 ஜேஜேஏஏ-வின் கீழ் பொய்யான தகவல்கள் அழித்தது தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்தன. தகுதியுடைய சில பணியாளர்கள் நிறுவனத்தில் பணியில் இல்லாத போதிலும், உட்பிரிவு 80 ஜேஜேஏஏ-வின் கீழ் சலுகை பெற்றதும் தெரிய வந்தது.

ரூபாய் 880 கோடி மதிப்பிலான வருமானத்தை பல வருடங்களாக மறைத்தது ஆய்வின்போது தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1735185

****************



(Release ID: 1735209) Visitor Counter : 267