சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்கள்
Posted On:
13 JUL 2021 10:34AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 38.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், 31,443 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன; 118 நாட்களில் இது மிகக் குறைவு.
நாடு முழுவதும், இதுவரை 3,00,63,720 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.28% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 49,007 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,31,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; கடந்த 109 நாட்களில் இது மிகக் குறைவு.
இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.40% ஆகும்.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.28 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 22 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.81 சதவீதமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.40 கோடி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734981
****
(Release ID: 1734981)
(Release ID: 1735000)
Visitor Counter : 252
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam