வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் கூட்டுறவுகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை வலுப்படுத்த ஏபிஇடிஏ என்ஏஃஎப்இடி(NAFED) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Posted On: 12 JUL 2021 5:43PM by PIB Chennai

வேளாண் கூட்டுறவு மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை வலுப்படுத்த, வேளான் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் தேசிய விவசாயப் பொருட்கள் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்த ஏற்றுமதியாளர்கள், மத்திய அரசால் தேசிய விவசாயப் பொருட்கள் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் உதவி பெறுவது முக்கிய அம்சமாகும். கூட்டுறவின் ஏற்றுமதி நிலைக்கத்தக்க வகையில் இருக்கும் வகையிலும், அதிகரிக்கவும் அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளான தொழில்நுட்பம், திறமை, தரம், பொருட்கள் மற்றும் சந்தை அணுகலை போன்றவற்றைக் களைய வேண்டுமென இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை அவர்கள் சமூக மற்றும் சூழல் விதிகளைப் பின்பற்றுவதற்கு ஏற்ப உதவிகள் செய்வது மற்றும் சர்வதேச தரத்தில் திறன் பயிற்சி அளித்தல் போன்றவை மூலம் உதவ இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

இதில் கையெழுத்திட்டுள்ள இரண்டு அமைப்புகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை பிராந்திய, மாநில மற்றும் தேசிய அளவில் மேற்கொள்ளும்.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் டாக்டர்.அங்கமுத்து மற்றும் தேசிய விவசாயப் பொருட்கள் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் திரு.சஞ்சீவ் சந்தா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்கள் கூடுதல் லாபம் பெறும் வகையிலும் இவ்விரண்டு நிறுவனங்களின் திறனைப் பயன்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734824

 

-----



(Release ID: 1734885) Visitor Counter : 344