நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மிக அதிக அளவிலான கோதுமை கொள்முதல்: உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு ரூ.11,141.28 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை

Posted On: 12 JUL 2021 4:47PM by PIB Chennai

நடப்பு ராபி சந்தை பருவம் 2021-22-ல், உத்தரப்பிரதேசத்தில் 56.41 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை, 12.98 லட்சம் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டதுஉத்தரப் பிரதேச வரலாற்றில், இது அதிகபட்ச கொள்முதல். இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.11,141.28 கோடி வழங்கப்பட்டது. ராபி சந்தை பருவம் 2020-21-ல் கொள்முதல் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. 6.64 லட்சம் விவசாயிகளிடமிருந்து 35.77 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் 2020-21 காரீப் சந்தைப் பருவத்திலும், நெல் கொள்முதலில் சாதனை படைக்கப்பட்டது.  66.84 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல், 10.22 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச வரலாற்றில், இது அதிக அளவிலான நெல் கொள்முதல். இதற்காக உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு ரூ.12,491.88 கோடி செலுத்தப்பட்டது.

நடப்பு ராபி சந்தை கொள்முதலில்சுமார் 49.16 லட்சம் விவசாயிகள், ரூ.  85,581.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.

நடப்பு காரிப் சந்தை பருவ கொள்முதலில், சுமார் 127.72 லட்சம் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,63,510.77 கோடி பெற்று ஏற்கனவே பயனடைந்துள்ளனர்

நெல் கொள்முதல், 2019-20 ஆண்டு காரிப் சந்தை பருவத்தின் மிக அதிக அளவான 773.45 லட்சம் மெட்ரிக் டன் அளவை கடந்து இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734807

 

-----

 


(Release ID: 1734840) Visitor Counter : 301