சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

Posted On: 12 JUL 2021 9:27AM by PIB Chennai

நமது நாட்டில் இதுவரை மொத்தம் மூன்று கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,649 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர்.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 37.73 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 37,154 ஆகப் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 4,50,899 ஆக உள்ளது.

இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.46 விழுக்காடு ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.32 விழுக்காடாக உள்ளது.

தினசரி தொற்று குறித்து விகிதம் தொடர்ந்து 21 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.59 சதவீதமாகப் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.23 கோடியாகப் பதிவாகி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734693

******

(Release ID: 1734693)


(Release ID: 1734726) Visitor Counter : 271