வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

167-வது நிறுவன நாளை 12 ஜூலை அன்று மத்திய பொதுப்பணித்துறை கொண்டாடவுள்ளது

Posted On: 10 JUL 2021 6:27PM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுப்பணித்துறை, நாட்டுக்கு சிறப்பாக சேவையாற்றுவதில் அதன் 167-வது ஆண்டை 2021 ஜூலை 12 அன்று கொண்டாடவுள்ளது. பெருந்தொற்றை கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பொதுப்பணிகளை நிறைவேற்றுவதற்கான மத்திய முகமையாக 1854-ம் ஆண்டு மத்திய பொதுப்பணித்துறை உருவாக்கப்பட்டது. திட்டத்தை உருவாக்குவதில் இருந்து நிறைவு செய்தல் மற்றும் பராமரிப்பு மேலாண்மை என முழுமையான கட்டுமான மேலாண்மை துறையாக அது தற்போது வளர்ந்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்வார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு கௌஷல் கிஷோர் மதிப்புறு விருந்தினராக இருப்பார்.

மத்திய பொதுப்பணித்துறை மலர் காட்சி: ஒரு பொக்கிஷ சேகரிப்பு, ஈஆர்பி மின்-பிரிவுகள், மத்திய பொதுப்பணித்துறையின் உட்புற வெளியீடான நிர்மான் பாரதி மற்றும் மத்திய பொதுப்பணித்துறை தொலைபேசி விவரப்புத்தகம் 2021 ஆகிய நான்கு தொழில்நுட்ப பதிப்புகள் தொடக்க நிகழ்ச்சியின் போது வெளியிடப்படும். மத்திய பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் விதத்தில் குறும்படம் ஒன்றும் திரையிடப்படும்.

துறையில் சிறந்து பணியாற்றும் அலுவலர்களுக்கு மத்திய பொதுப்பணித்துறையின் விருதுகள் இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்படும். மத்திய பொதுப்பணித்துறையின் அலுவலர்கள் மற்றும் நிபுணர்களால் தொழில்நுட்ப விளக்கங்களும் வழங்கப்படும்.

 

----


(Release ID: 1734459) Visitor Counter : 301