பாதுகாப்பு அமைச்சகம்

இஸ்ரேல் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு

Posted On: 09 JUL 2021 12:23PM by PIB Chennai

இஸ்ரேல் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் பெஞ்சமின் கன்ட்ஸ்-வுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் பேசினார். இஸ்ரேல் துணைப்பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு லெப்டினன்ட் ஜெனரல் பெஞ்சமின் கன்ட்ஸ்க்கு திரு. ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். 

தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பின், சுட்டுரையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்  விடுத்துள்ள செய்தியில், இஸ்ரேலுடன் பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்துவதிலும், யுக்தியுடன் கூடிய பங்களிப்பை மேம்படுத்துவதிலும் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

கொவிட்-19 தொற்றை கையாள்வதில் இந்தியாவுக்கு இஸ்ரேல் வழங்கிய உதவிக்காக லெப்டினன்ட் ஜெனரல் பெஞ்சமின் கன்ட்ஸிடம், திரு ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார். 

*****************


(Release ID: 1734183)