புவி அறிவியல் அமைச்சகம்

மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக டாக்டர்.ஜித்தேந்திர சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்

Posted On: 08 JUL 2021 6:22PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக டாக்டர்.ஜித்தேந்திர‌ சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.(தனிப் பொறுப்பு) இதன் பின் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், புவி அறிவியலின் முக்கியத்துவத்தை, வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றைப் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய புவியியல் துறை விஞ்ஞான தரவுகள் மூலம் ஆராய்ந்து தேவையான முன்னறிவிப்பு வழங்கி விவசாயிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருவதாக அவர் கூறினார். மேலும், இந்தியாவில் தற்போது உருவாக்கி  பயன்படுத்தப்படும் வானிலை கணிப்பு தொழில்நுட்பம் உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளதையும், பல நாடுகள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர், துறை அதிகாரிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய அமைச்சர், சாதாரண மக்கள், குறிப்பாக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் தொழில்நுட்பங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733795

                                                                                   ------



(Release ID: 1733991) Visitor Counter : 166