ரெயில்வே அமைச்சகம்
மத்திய ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக திரு அஷ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றுக்கொண்டார்
प्रविष्टि तिथि:
08 JUL 2021 5:20PM by PIB Chennai
மத்திய ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான திரு அஷ்வினி வைஷ்ணவ், ரயில் பவனிலும் அதைத்தொடர்ந்து எலக்ட்ரானிக் நிகேதன் மற்றும் சஞ்சார் பவனிலும் இன்று (2021 ஜூலை 8) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நலிந்த நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியம் என்று அமைச்சர் கூறினார்.
ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையையும் தொடுவதாக குறிப்பிட்ட அமைச்சர், பிரதமரின் லட்சியத்தை நிறைவேற்ற தாம் உழைக்கப்போவதாக தெரிவித்தார்.
1970-ம் வருடம் பிறந்த திரு அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுரேந்தர்கர், பாலாசூர், கட்டாக் மற்றும் கோவா மக்களுக்கு அவர் பணியாற்றியுள்ளார். ஐஐடி கான்பூரில் தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், வார்டனில் எம் பி ஏ படித்துள்ளார்.
தொழில்நுட்பம், நிதி மற்றும் சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவுகளில் அவற்றை செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றில் அவர் திறன் பெற்றவர் ஆவார். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் தத்துவத்தில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.
டிவிட்டர்: https://twitter.com/AshwiniVaishnaw?s=08
முகநூல்: https://www.facebook.com/ashwinivaishnaw
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/ashwini.vaishnaw/
---
(रिलीज़ आईडी: 1733984)
आगंतुक पटल : 244