பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் முஞ்சப்பரா மகேந்திர பாய் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
08 JUL 2021 5:16PM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் முஞ்சப்பரா மகேந்திர பாய் இன்று பொறுப்பேற்றார். மூத்த அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை தவிர ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சுரேந்திர நகர் தொகுதியில் இருந்து 16-வது மக்களவைக்கு டாக்டர் மகேந்திர பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொது மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளில் குஜராத் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுநிலை பட்டத்தை பெற்றுள்ள அமைச்சர், தமது அரசியல் பணியை தொடங்குவதற்கு முன்னர் குஜராத்தில் புகழ்பெற்ற இருதய சிகிச்சை நிபுணராகவும் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.
-----
(रिलीज़ आईडी: 1733951)
आगंतुक पटल : 228