திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சராக திரு தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுக் கொண்டார்; இணை அமைச்சராக திரு ராஜீவ் சந்திரசேகர் இணைந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUL 2021 5:13PM by PIB Chennai

திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சராக திரு தர்மேந்திர பிரதானும், இணை அமைச்சராக கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ராஜீவ் சந்திரசேகரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்

நேற்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சராக இருந்த டாக்டர் மகேந்திரநாத் பாண்டே இந்நிகழ்வின் போது உடனிருந்து இரு அமைச்சர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அமைச்சகத்தின் திறன் வளர்த்தல் முயற்சிகளுக்கு வலுவூட்டவும், எதிர்கால பணிக்கு தேவையான திறன்களை இளைஞர்களுக்கு வழங்கி திறன் வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் தாம் உறுதிபூண்டு உள்ளதாக திரு தர்மேந்திர பிரதான் கூறினார். இணை அமைச்சராக பொறுப்பேற்ற திரு ராஜீவ் சந்திரசேகருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த திரு பிரதான், தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிக்க  அவருடன் இணைந்து பணிபுரிந்து, பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான இந்தியாவை உலகின் திறன் தலைநகரமாக ஆக்குவதற்கு ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.

திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றுவது தமக்கு பெருமை அளிப்பதாக கூறிய திரு ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான டிஜிட்டல், திறன்மிக்க மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க தாம் கடினமாக உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

----


(வெளியீட்டு அடையாள எண்: 1733857) வருகையாளர் எண்ணிக்கை : 336
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Kannada