கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

Posted On: 07 JUL 2021 5:19PM by PIB Chennai

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ராம்பாக் என்ற இடத்தில், மாநில அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். தீன்தயாள் துறைமுகம், இந்த மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை ரூ.50 லட்சம் செலவில், அமைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

ஒரு மாதத்துக்குள், இரண்டாவது ஆக்ஸிஜன் ஆலையை அமைத்த துறைமுகக் குழு மற்றும் இதர தரப்பினருக்கு வாழ்த்துகள். இந்த ஆலை, ஆக்ஸிஜனை விரைவாக நிரப்புவதையும், மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கு சுமூகமான ஆக்ஸிஜன் விநியோகத்தையும் உறுதி செய்யும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பெருநிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கைகள்(சிஅஸ்ஆர்) மூலம் அனைத்து துறைமுகங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றன. சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவது, துறைமுகங்களின் கடமை.

ராம்பாக் காந்திதாம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்திஆலை, மணிக்கு 20,000 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இது இப்பகுதியில் கொவிட் சிகிச்சைக்கும் மற்றும் இதர சிகிச்சைக்கும் பயன்படும்ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அடிக்கடி நிரப்புவதில் உள்ள கஷ்டங்களை இந்த ஆக்ஸிஜன் ஆலை குறைக்கும்,

மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் தொடர்ந்து சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733397

----(Release ID: 1733453) Visitor Counter : 185