பாதுகாப்பு அமைச்சகம்
இத்தாலிய கடற்படை கப்பலுடன், ஐஎன்எஸ் தபார் கப்பல் பயிற்சி
Posted On:
07 JUL 2021 1:18PM by PIB Chennai
மத்திய தரைக்கடலில் நடைபெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக 2021 ஜூலை 3 அன்று ஐஎன்எஸ் தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்திற்குள் நுழைந்தது. இந்திய கப்பலுக்கு இத்தாலிய கடற்படை உற்சாக வரவேற்பளித்தது. துறைமுகத்தில் தங்கியிருந்த போது, கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, நேப்பிள்ஸ் ஆணையகம், மண்டல இத்தாலிய கடற்படை தலைமையகம் மற்றும் நேபிளிஸில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. வான் பாதுகாப்பு நடைமுறைகள், கடலில் மீட்பு நடவடிக்கைகள், தகவல் தொடர்புப் பயிற்சிகள் முதலிய பல்வேறு கடல்சார் பயிற்சிகளில் இரு கப்பல்களும் ஈடுபட்டன.
இயங்குதளத்தை மேம்படுத்துவதற்கும், கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி இரு நாடுகளுக்கும் பயனளித்தது.
கடற்படையின் வழக்கப்படி நடைபெற்ற ‘நீராவி அணிவகுப்புடன்’ பயிற்சி நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733321
****
(Release ID: 1733321)
(Release ID: 1733338)
Visitor Counter : 293