சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்
Posted On:
07 JUL 2021 9:08AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 36.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
நாளொன்றின் புதிய பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,733 ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,59,920 ஆகக் குறைந்துள்ளது; மொத்த தொற்றாளர்களில், இவர்களின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு.
நம் நாட்டில் இதுவரை 2,97,99,534 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 47,240 பேர் குணமடைந்துள்ளார்கள்
தொடர்ந்து 55-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.39 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம், தொடர்ந்து 16 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.29 சதவீதமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 42.33 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733244
*******
(Release ID: 1733244)
(Release ID: 1733292)
Visitor Counter : 255
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam