குடியரசுத் தலைவர் செயலகம்

நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத் தலைவரிடம் காணொலி மூலம் வழங்கினர்

Posted On: 06 JUL 2021 4:51PM by PIB Chennai

கொலம்பியா குடியரசு, உருகுவே, ஜமைக்கா மற்றும் அர்மேனிய குடியரசின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்திடம்  காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று வழங்கினர்.

அவர்களின் விவரம் பின்வருமாறு:

1. மேன்மைமிகு திருமிகு மரியானா பச்சேக்கோ மோன்டஸ், கொலம்பிய குடியரசின் தூதர்

2. மேன்மைமிகு திரு ஆல்பர்டோ அண்டனியோ குவானி அமரில்லா, உருகுவே தூதர்

3. மேன்மைமிகு திரு ஜேசன் கீட்ஸ் மாத்யூ ஹால், ஜமைக்கா தூதர்

4. மேன்மைமிகு திரு யூரி பாபாகன்யான், அர்மேனிய குடியரசின் தூதர்

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து நாடுகளுடனும் இந்தியா நட்புறவை பேணி வருவதாக தெரிவித்த அவர், அமைதி மற்றும் வளம் எனும் பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் நமது உறவுகள் அமைந்துள்ளன என்றார்.

ஒட்டுமொத்த சுகாதார மற்றும் பொருளாதார நலனை உறுதி செய்வதற்காக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளின் முன்னணியில் இந்தியா இருப்பதாக குடியரசு தலைவர் திரு கோவிந்த் கூறினார்.

உலகின் மருந்தகமமாக திகழும் இந்தியா, கொவிட்டுக்கு புதிரான உலகின் போரில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார்.

தங்களது தலைவர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த தூதர்கள், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து பணிபுரிய உறுதி பூண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1733124

*****************



(Release ID: 1733159) Visitor Counter : 254