சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 33.63 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது மத்திய அரசு: மேலும் 44 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்படுகின்றன.
प्रविष्टि तिथि:
02 JUL 2021 10:39AM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 33.63 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. 44 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொவிட் தடுப்பூசி போடுவதை விரைவு படுத்துவதிலும், நாடு முழுவதும் விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கொவிட் தடுப்பூசியின் புதிய திட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது.
அதிக தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதன் மூலம் தடுப்பூசி போடும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதை சிறப்பாக திட்டமிடுவதற்கும், தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தடுப்பூசி கிடைக்கும் நிலவரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன.
நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தின்படி, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 33.63 கோடி (33,63,78,220) தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இவற்றில் இன்று காலை 8 மணி வரை, வீணான தடுப்பூசிகள் உட்பட 33,73,22,514 டோஸ்கள் காலியாகியுள்ளன.
மேலும், 44,90,000 தடுப்பூசி டோஸ்களை அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இன்னும் 3 நாட்களில் பெறும்.
*****************
(रिलीज़ आईडी: 1732253)
आगंतुक पटल : 314
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam