ரெயில்வே அமைச்சகம்

ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்கள்: இந்திய ரயில்வே

Posted On: 29 JUN 2021 1:47PM by PIB Chennai

வருங்காலத்திற்குத் தயாராகும்வகையில் ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்களை வரும் ஆண்டுகளில்  மேற்கொள்ளும் தீவிர முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.

கொவிட் சவால்களுக்கு இடையேயும், வழித்தடங்களின் திறனை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான திட்டங்களை நிறைவு செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே துரிதமாக ஈடுபட்டுவருகிறது.

ரூ.11,588 கோடி மதிப்பில் 1,044 கிலோமீட்டர் தொலைவில் 29 அதிக சிக்கலான திட்டங்கள் கடந்த ஓராண்டில் பயன்பாட்டுக்கு வந்தன.

ரூ. 39663 கோடி மதிப்பில் மொத்தம் 3750 கிலோ மீட்டர் தொலைவில் 58 அதிக சிக்கலான திட்டங்களை இந்திய ரயில்வே கண்டறிந்தது. இவற்றில் 27 திட்டங்கள் நடப்பாண்டு டிசம்பர் மாதமும், மீதமுள்ள 2 திட்டங்கள் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதமும் நிறைவடைந்து ஒப்படைக்கப்படும்.

போக்குவரத்து அதிகரிப்பு, கொண்டு சேர்க்கப்படும் பொருட்கள், முக்கிய வழித்தடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் உட்பட விரிவாக்கப் பணிகளின் தேவை அதிகம் உள்ளவை (ஏற்கனவே 60%க்கும் மேலான செலவுகள்), அதிக சிக்கலான திட்டங்கள் (மொத்தம் 58) என்றும், இதற்கு அடுத்து நிறைவேற்றப்பட வேண்டியுள்ளவை, சிக்கலான திட்டங்கள் (மொத்தம் 68) என்றும் குறிப்பிடப்படுகின்றன. மின்மயமாக்கல், சமிக்ஞை பணிகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் கவனம் மற்றும் தொடர் கண்காணிப்பின் வாயிலாக இந்தத் திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவடைந்த பிறகு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மேம்படுவதுடன், கண்டறியப்பட்டுள்ள வழித்தடங்களில் கூடுதல் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கும் திறனும் உருவாகும். கண்டறியப்பட்டுள்ள இந்த திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731111

-----


(Release ID: 1731184) Visitor Counter : 291