சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிய திட்டத்தின் முதல் நாளில், 64 சதவீத தடுப்பூசிகள், ஊரகப் பகுதிகளில் போடப்பட்டன

Posted On: 23 JUN 2021 2:31PM by PIB Chennai

மாற்றியமைக்கப்பட்ட தடுப்பூசிதிட்ட வழிகாட்டுதல்கள்  கடந்த 21ம் தேதி அமலுக்கு வந்தது. இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), டாக்டர் வி.கே.பால், தில்லியில் செவ்வாய் கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல் நாளில் போடப்பட்ட தடுப்பூசிகளில் 63.38 சதவீதம், ஊரகப்பகுதிகளில் போடப்பட்டன. அன்றைய தினம் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளில், 56.09 லட்சம் தடுப்பூசிகள் ஊரக தடுப்பூசி மையங்களுக்கு வழங்கப்பட்டன. நகர்புறங்களில் 31.9 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஊரக பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக உள்ளது. மக்களும் அதிகளவில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஊரகம் மற்றும் தொலைதூர பகுதிகளில்  தடுப்பூசி திட்டத்தை கொண்டுசெல்வது சாத்தியம் என இது நிருபித்துள்ளது. 

நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டவர்களில் 46 சதவீதம் பேர் பெண்கள், 53 சதவீதம் பேர் ஆண்கள். அனைத்து இடங்களிலும் நிலவும் இந்த பாலின சமச்சீரற்ற நிலையை நாம் சரி செய்ய வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு பெண்களை அதிகளவில் முன்வர செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729684

*****************



(Release ID: 1729789) Visitor Counter : 220