எரிசக்தி அமைச்சகம்

பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் பசுமை ஹைட்ரஜன் உச்சிமாநாட்டை நடத்தியது என்டிபிசி நிறுவனம்

Posted On: 23 JUN 2021 12:30PM by PIB Chennai

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், என்டிபிசி நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் பற்றிய இரண்டு நாள் உச்சிமாநாட்டை நடத்தியது. தற்போது பசுமை ஹைட்ரஜன்தான், அடுத்த கட்ட எரிசக்தியாக கருதப்படுகிறது.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்றனர். பசுமை ஹைட்ரஜன் துறை பற்றிய நுண்ணறிவு, தொழில்முறை பார்வை, இத்துறையில் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சக செயலாளர் திரு அலோக் குமார் கலந்து கொண்டு பேசுகையில்,  ‘‘பசுமை ஹைட்ரஜன் துறையில் முதலீட்டுக்கு தற்போதுள்ள ஒழுங்குமுறைகள், தேவையற்ற தடையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் தொழில் துறை இணைந்து செயல்பட வேண்டும். ஹைட்ரஜனை பாதுகாப்பாக கொண்டு செல்வது, அதிகளவில் சேமிப்பது ஆகியவற்றில் சர்வதேச தரத்தை பின்பற்றுவது போன்ற அம்சங்களில் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

வரவேற்புரையில் என்டிபிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு குர்தீப் சிங் பேசுகையில், நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி பற்றிய பொது தொலைநோக்கை 5 பிரிக்ஸ் நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, மலிவான, நம்பகமான, அணுகக்கூடிய, பாதுகாப்பான எரிசக்தியை உறுதி செய்வது போன்றவை பிரிக்ஸ் நாடுகளின் கொள்கையில், எப்போதும் முக்கியமான பகுதியாக உள்ளது.

பசுமை ஹைட்ரஜனில், பிரிக்ஸ் நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் ஆர்வமாக உள்ளன. ஏனென்றால், நிலையான எரிசக்தியை விநியோகிக்கும் ஆற்றல் இதில் அதிகமாக உள்ளது. எரிசக்தி கிடைப்பதன் அளவை அதிகரிக்கிறது மற்றும் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729630

*****************


(Release ID: 1729751) Visitor Counter : 262