மத்திய அமைச்சரவை
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை 2021 ஜூலையில் இருந்து 2021 நவம்பர் வரை நீட்டிக்க அரசு ஒப்புதல்
Posted On:
23 JUN 2021 12:59PM by PIB Chennai
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை 2021 ஜூலையில் இருந்து 2021 நவம்பர் வரை நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் (பகுதி 4)- கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அதிகபட்சம் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜூலை முதல் நவம்பர் வரை ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
2020 ஏப்ரல்-நவம்பர் வரையிலான பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்காக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை 2020-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது.
இதன் மூலம் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) சுமார் 80 கோடி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு எட்டு மாதங்களுக்கு (ஏப்ரல்-நவம்பர் 2020) வழங்கப்பட்டு, கொவிட்-19 பெருந்தொற்றால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் உணவு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் 2020-ன் கீழ் (ஏப்ரல்-நவம்பர் 2020), மொத்தம் 321 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டு, 305 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் எடுத்து செல்லப்பட்டு, 298 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (ஒதுக்கீட்டில் 93%) நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன.
நாட்டின் கொவிட்-19 நிலையை ஆய்வு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு நெருக்கடியின் போது உதவி செய்யும் பொருட்டு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் (2021), 2021 நவம்பரில் வரும் தீபாவளி வரை மேலும் நீட்டிக்கப்படும் என்று 2021 ஜூன் 7 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
இதன் படி, ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) ஐந்து மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மொத்தம் 204 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் 80 கோடி தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு ரூ 67,266 கோடி செலவில் வழங்கப்படும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்படும் உணவு தானியங்களுக்கு கூடுதலாக இவை வழங்கப்படும். இத்திட்டத்தின் முழு செலவையும், மாநில அரசுகள் / யூனியன் பிரதேச அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் மத்திய அரசே ஏற்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729645
*****************
(Release ID: 1729707)
Visitor Counter : 564
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam