அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது சிஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர்

प्रविष्टि तिथि: 22 JUN 2021 9:02AM by PIB Chennai

ஏழாவது சர்வதேச யோகா தினத்தை சிஎஸ்ஐஆர் - அறிவியல் தகவல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி தேசிய மையம் (ன்ஐஎஸ்சிபிஆர்)  புது தில்லியில் நேற்று கொண்டாடியது. இதில் விஞ்ஞானிகள், ஊழியர்கள், மாணவர்கள் என நாடு முழுவதும் இருந்து பல தரப்பினர் ஆன்லைன் மூலம் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி பேஸ்புக் லைவ் மூலம் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.

சிஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர் இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், துவக்கவுரை நிகழ்த்தினார். மனிதர்களுக்கு பல வழிகளில் யோகா முக்கியமானதாக உள்ளது என அவர் கூறினார். இந்திய அறிவு அமைப்பு நமது உடலை, மனம் மற்றும் ஆன்மாவுடன் இணைக்கிறது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை வைத்தியம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை நமது வளமான இந்திய பாரம்பரிய அறிவின் கீழ் வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஆயுஸ் அமைச்சகத்தின் நாத யோகா நிபுணர் டாக்டர் நவ்தீப் ஜோஷி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். யோகா நம்மை மனம் மற்றும் ஆன்மாவுடன் இளைமையாக்குகிறது என்றும், நமது உள்ளத்துடன் அறிமுகப்படுத்துகிறது என்றும் டாக்டர் நவ்தீப் ஜோஷி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நமது உடலின் சக்தியை யோகாசார்யா மஞ்சரி வலியுறுத்தினார். நமது உடலில், உள் சக்தி உள்ளது என்றும் அது நம் மனதில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729274

*****************


(रिलीज़ आईडी: 1729372) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu