கனரகத் தொழில்கள் அமைச்சகம்

5 லட்சம் கியூபிக் மீட்டருக்கும் அதிகமான மருத்துவ ஆக்சிஜனை நாட்டின் கொவிட்டுக்கு எதிரான போருக்கு பெல் ஆலைகள் இதுவரை வழங்கியுள்ளன

Posted On: 21 JUN 2021 2:53PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலை எதிர்பாராத தேசிய நெருக்கடியாக உருவெடுத்த சமயத்தில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்

சேவையாற்றுவதற்காக போர்க்கால அடிப்படையில் பெல் இயங்கியது.

போபால் மற்றும் ஹரித்துவாரில் அமைந்துள்ள பெல் ஆலைகள், சுற்றியுள்ள பகுதிகளுக்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்கின. தனது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு நாளைக்கு 24,000 கியூபிக் மீட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் பெல் ஹரித்துவார் ஆலைக்கு இருந்தது.

ஏப்ரல் மாத மத்தியில் நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து, பெல் ஹரித்துவார் ஆலையின் ஊழியர்கள் இரவுப்பகலாக பணியாற்றி ஒரே வாரத்தில் ஒரு நாளைக்கு 3000 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பக்கூடியவாறு ஆலையின் திறனை உயர்த்தினர்.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், மாவட்ட முகமைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, 67,000 உருளைகள் (3,87,000 கியூபிக் மீட்டர்களுக்கும் அதிகமான) மருத்துவ ஆக்சிஜனை இந்த ஆலை இது வரை நிரப்பியுள்ளது.

கஸ்தூரிபாய் மருத்துவமனை, எய்ம்ஸ், ராணுவ மருத்துவமனை, காவலர் மருத்துவமனை மற்றும் மத்தியப் பிரேதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 1,74,000 கியூபிக் மீட்டர்கள் ஆக்சிஜனை (26,000 உருளைகளுக்கும் அதிகம்) பெல் நிறுவனத்தின் போபால் ஆலை இது வரி விநியோகித்துள்ளது.

பெல்லின் இதர ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெல் நிறுவனம் உறுதியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729042

----(Release ID: 1729132) Visitor Counter : 136