எரிசக்தி அமைச்சகம்

சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது பொசோகோ நிறுவனம்

प्रविष्टि तिथि: 21 JUN 2021 12:55PM by PIB Chennai

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொதுத் துறை நிறுவனம் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), 7வது சர்வதேச யோகா தினத்தை 600 ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆன்லைன் மூலம் இன்று கடைபிடித்தது.

வாழும் கலை அமைப்புடன் இணைந்து இந்த யோகா நிகழ்ச்சியை பொசோகோ நிறுவனம் நடத்தியது.   இந்தாண்டின் கருப் பொருள்  ‘‘ஆரோக்கியத்துக்கு யோகா’’. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்காக யோகா செய்வதில் கவனம் செலுத்துகிறது.  

இந்நிகழ்ச்சியில் பேசிய பொசோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு கே.வி.எஸ் பாபா, உடல் மற்றும் மன நலத்தை பெற, பொசோகோ நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர்  தினந்தோறும் யோகாவில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.   வளர்ச்சிதை மாற்றம், ரத்த ஒட்டம், சுவாசப் பிரச்சினைகள் ஆகியவற்றை யோகா மேம்படுத்துகிறது என அவர் கூறினார்யோகா, மன நலத்தை பலப்படுத்தி, அச்சம், கவலை, மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது என்றும் அவர் கூறினார்

இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில், பல யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் உள்பட பிராணயாமா  ஆகியவை வாழும் கலை அமைப்பின் யோகா நிபுணர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728993

 

-----


(रिलीज़ आईडी: 1729063) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu