மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஜி20 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே பங்கேற்பு
Posted On:
20 JUN 2021 6:42PM by PIB Chennai
ஜி20 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு 2021 ஜூன் 22ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் கல்வி மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் திரு சஞ்ஜே தோத்ரே கலந்து கொள்கிறார்.
அன்றைய தினம் நடைபெறும் கல்வி மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த இரு கூட்டங்களும், இத்தாலி தலைமையில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் நடக்கிறது. இதில் இந்தியா காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறது.
------
(Release ID: 1728864)
Visitor Counter : 200