எரிசக்தி அமைச்சகம்

பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்து 2 நாள் உச்சி மாநாடு: பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து நடத்துகிறது இந்தியா

Posted On: 20 JUN 2021 1:26PM by PIB Chennai

பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்த 2 நாள் உச்சிமாநாட்டை பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து இந்தியா ஜூன் 22ம் தேதி நடத்துகிறது.

காற்று அல்லது சூரிய மின்சக்தி மூலம், மின்னாற்பகுப்பு முறையில், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதுதான் பசுமை ஹைட்ரஜன்இந்தியா நடத்தும் இந்த நிகழ்ச்சி, பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்த கருத்துக்களை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து பகிர்ந்து கொள்ளும்.

காணொலி காட்சி மூலம் நடைப்பெறும் இந்த உச்சிமாநாடு ஜூன் 23ம் தேதி முடியும்.

இந்நிகழ்ச்சியை மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி(தேசிய அனல் மின் நிறுவனம்) நடத்துகிறதுஇதில் பிரிக்ஸ் நாடுகளின் நிபுணர்கள் கலந்து கொண்டு எதிர்காலத்தில் எரிசக்தியில் ஹைட்ரஜனை கலப்பது குறித்து விரிவாக விவாதிப்பர்.

பசுமை ஹைட்ரஜனை பல வகைகளில் பயன்படுத்தலாம். அம்மோனியா மற்றும் மெத்தனால் போன்ற பசுமை ரசாயணங்களை, உரங்கள்மின்சாரம், இயக்கம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் பயன்படுத்த முடியும்மேலும் எஃகு மற்றும் சிமெண்ட் துறையில், பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளன. தங்கள் நாட்டின் வளங்கள் மற்றும் பலம் அடிப்படையில் பல நாடுகள் தங்களின் உத்திகளையும், திட்டங்களையும் கொண்டு வந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728743

------



(Release ID: 1728784) Visitor Counter : 234