தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான நிபுணர் குழு தனது அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உள்ளது

Posted On: 19 JUN 2021 1:24PM by PIB Chennai

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊதிய அளவுகள் குறித்து அரசுக்கு தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரபல பொருளாதார பேராசிரியர் அஜித் மிஷ்ரா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவின் ஆயுட்காலம் மூன்று வருடங்கள் ஆகும்.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊதிய அளவுகளை நிர்ணயம் செய்வதை தாமதப்படுத்துவதற்கான அரசின் முயற்சி இது என்று சில ஊடகங்களும், பங்குதாரர்களும் தெரிவித்திருப்பதாக கவனத்திற்கு வந்துள்ளது.

இத்தகைய எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்றும், நிபுணர் குழு தனது அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உள்ளது என்றும் இதன் மூலம் தெளிவுப்படுத்த படுகிறது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊதிய அளவுகளை நிர்ணயம் செய்த பின்னரும் தேவை ஏற்படின் ஆலோசனைகளை பெறுவதற்காகவே குழுவின் ஆயுட்காலம் மூன்று வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம் 2021 ஜூன் 14 அன்று நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் 2021 ஜூன் 29 அன்று நடைபெறவுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728499

*****************


(Release ID: 1728589) Visitor Counter : 263