குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

உத்யோக் ஆதார் திட்டத்தை 2021 டிசம்பர் 31 வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் நீட்டித்தது

Posted On: 17 JUN 2021 7:19PM by PIB Chennai

உத்யோக் ஆதார் பத்திர திட்டத்தின் செல்லுபடி காலத்தை 2021 மார்ச் 31-ல் இருந்து 2021 டிசம்பர் 31 வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் நீட்டித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முன்னுரிமை துறை கடன் வசதிகள் உள்ளிட்ட தற்போதுள்ள அனைத்து திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளின் பலன்களை ஈஎம் பகுதி-2 மற்றும் உத்யோக் ஆதார் பத்திரதாரர்கள் இதன் மூலம் பெற முடியும்.

தற்போதைய கொவிட்-19 நிலைமையின் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மற்றும் அரசு துறைகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈஎம் பகுதி-2 மற்றும் உத்யோக் ஆதார் பத்திரதாரர்கள் புதிய முறையான உதயம் பதிவுக்கு தங்களை மாற்றிக்கொண்டு அரசு திட்டங்களின் பலன்களை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் விரைவில் மீண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

விருப்பமுள்ள நிறுவனங்கள் https://udyamregistration.gov.in எனும் தளத்தில் இலவசமாக எந்த ஆவணங்களும் இல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதார் தகவல்கள் மட்டுமே போதுமானவை. 33,16,210 நிறுவனங்கள் இது வரை தங்களை பதிவு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727980

 

-----



(Release ID: 1728025) Visitor Counter : 262