சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சென்னை உள்பட 14 நகரங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்கள் தொடக்கம்

Posted On: 17 JUN 2021 5:20PM by PIB Chennai

சென்னை உட்பட 14 நகரங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்களை சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 14 நகரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் 7 தேசிய மையங்கள் மற்றும் 7 மண்டல மையங்களில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பகட்ட சிகிச்சை மையத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மையங்கள் பல்வேறு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பரிசோதனை, அடையாளம், மறுவாழ்வு, ஆலோசனை, சிகிச்சைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்கும்.

இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர்கள் திரு கிருஷ்ண பால் குர்ஜார், திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. மாற்றுத்திறனாளின் உரிமைகள் குறித்த .நா மாநாட்டின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016- மத்திய அரசு அமல்படுத்தியது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்தும் உள்ளடங்கிய சமூகத்தை உருவாக்குகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் குறித்த புத்தகமும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு கிருஷ்ண பால் குர்ஜார், ‘‘பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதுதான், மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று’’ என்றார்

மத்திய இணையமச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், ‘‘ நாட்டில் முதல் முறையாக இது போன்ற சிகிச்சை மையம் வந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். மாற்றத்திறனாளிகளை தற்சார்புடையவர்களாக ஆக்கி அவர்களை சமூகத்தில் ஒன்றிணைப்பது தான் இந்த மையங்களின் நோக்கம்’’ என்றார்

மத்திய இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா பேசுகையில், ‘‘ குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இந்த சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது குழந்தைகளை ஈர்க்கும்’’ என்றார். .

டேராடூன், தில்லி, மும்பை, செகந்திராபாத், கொல்கத்தா, கட்டாக், சென்னை, சுரேந்திரநகர், லக்னோ, போபால், ராஜ்நந்த்கான், பாட்னா, நெல்லூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இந்த சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727935

-----



(Release ID: 1727989) Visitor Counter : 194