நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
விவசாயத்திற்கு ஊக்கத்தொகை அளித்து, தானியங்களை விநியோகிப்பதற்காக விதிமுறைகளை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: திரு பியூஷ் கோயல்
Posted On:
15 JUN 2021 7:09PM by PIB Chennai
உணவு தானியங்களின் கொள்முதல், விநியோகம் மற்றும் வழங்கல் ஆகியவற்றுக்கான கொள்கை கட்டமைப்பை ஆய்வு செய்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், விவசாயத்திற்கு ஊக்கத்தொகை அளித்து, தானியங்களை விநியோகிப்பதற்காக விதிகளை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
விவசாயம் மற்றும் தானியங்களின் கொள்முதல் திட்டமிட்டு அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
உணவு மற்றும் பொது விநியோக துறை மற்றும் விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். மக்கா, ஜுவர், பஜ்ரா மற்றும் ராகி போன்றவை உடல் நலத்திற்கு மட்டுமில்லாது வேளாண் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தினையை பிரபலப்படுத்துவதற்கான தேவையை பிரதமர் சமீபத்தில் வலியுறுத்தினார். 2023-ஐ சர்வதேச தினை ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்துள்ளது. இவற்றின் காரணமாக, உணவு தானியங்களின் கொள்முதல், விநியோகம் மற்றும் வழங்கல் ஆகியவற்றுக்கான கொள்கை வழிகாட்டுதல்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
விதிமுறைகளை திருத்தியமைப்பதன் மூலம் தானியங்களின் கொள்முதலுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார். 2020-21 கரிப் பருவத்தின் போது இந்தியாவில் 3,04,914 விவசாயிகள் பலனடைந்தனர். 2020-21-ல் 11.62 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727299
----
(Release ID: 1727359)
Visitor Counter : 250