சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இன்சாகாக் மரபியல் கூட்டமைப்பின் ஆய்வு மாறுபட்ட கொரோனா மாதிரிகளை கண்டறிந்து அதன் தரவுகளை மாநிலங்களுடன் பகிர உதவியுள்ளது: மத்திய அரசு விளக்கம்

Posted On: 15 JUN 2021 3:26PM by PIB Chennai

நாட்டில் வேறுபட்ட கொரோனா மாதிரிகளை கண்டறிந்து, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதில்  பின்னடைவு உள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

மாறுபட்ட கொரோனா மாதிரிகளை கண்டறிவது நாட்டின் நோக்கம், அறிவியல் கொள்கை மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்படும் உத்தி என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. இந்த உத்தி அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்படும்.

 

இந்திய சார்ஸ் கொவிட் மரபியல் கூட்டமைப்பின்(இன்சாகாக்) கீழ் மரபியல் மாதிரியை கண்டறியும் உத்தி:

இந்தியாவில் கொரோனாவின் வேறுபட்ட மாதிரிகளை கண்டறிய, மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் இன்சாகாக் அமைப்பு கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில், வேறுபட்ட கொரோனா மாதிரிகளை கொண்டு வரும் சர்வதேச பயணிகளை அடையாளம் காணவும், மக்களிடம் ஏற்கனவே உள்ள வேறுபட்ட கொரோனா மாதிரிகளை கண்டறியவும், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 விதமான உத்திகள் பின்பற்றப்பட்டன.

குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

தினசரி பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை உள்ள மாநிலங்களில் இருந்து 5 சதவீத பாதிப்புகளின் மாதிரிகள்  ஆய்வு செய்யப்பட்டன. இதில் சர்வதேச பயணிகள் மூலம் இங்கிலாந்து வகை கொரோனா மாதிரி பரவியதும் நிருபணம் ஆனது. இது தொடர்பான தகவல்களும் மாநிலங்களுன் சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

 

----



(Release ID: 1727316) Visitor Counter : 289