சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 148-வது நாள்: 25 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது

प्रविष्टि तिथि: 12 JUN 2021 8:11PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் முக்கிய மைல்கல்லை இந்தியா இன்று கடந்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 25 கோடிக்கும் (25,28,78,702) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

மேலும், முதல் டோசை பொருத்தவரை, 20 கோடி (20,46,01,176) என்னும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது.

18-44 வயது பிரிவில் 18,45,201 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,12,633 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர். 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 4,00,31,646 பேர் முதல் டோசையும், 6,74,499 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

பிகார், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 2209641 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 7950 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 59984 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 148-வது நாளில் (2021 ஜூன் 12), 31,67,961 டோஸ்கள் வழங்கப்பட்டன. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 28,11,307 பேருக்கு முதல் டோசும், 3,56,654 நபர்களுக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டன. இறுதி அறிக்கைகள் இன்றிரவு நிறைவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726653

 

-----


(रिलीज़ आईडी: 1726668) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu