பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவ மையத்தில் பயிற்சியை நிறைவு செய்தனர் 425 வீரர்கள்
प्रविष्टि तिथि:
12 JUN 2021 2:38PM by PIB Chennai
148 வழக்கமான படிப்புகள், 131 தொழில்நுட்பப் படிப்புகளைச் சேர்ந்த வீரர்களும், 9 நட்பு நாடுகளின் 84 வீரர்களுமாக மொத்தம் 425 வீரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சி இன்று (ஜூன் 12, 2021) கொவிட்- 19 நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது.
பிறருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உற்சாகம் மற்றும் ஆர்வத்துடன் வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டனர். மேற்குப் பிராந்திய தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி சிங் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.
இளம் வீரர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் உயர்தர பயிற்சியைக் குறிக்கும் வகையில் சிறப்பான அணிவகுப்பு மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சி இயக்கங்களை வெளிப்படுத்தியமைக்காக பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். நாட்டிற்கு சேவையாற்றும் உன்னத பணியைத் தேர்வு செய்ய தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கமளித்த பெற்றோருக்கும் அவர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.
பயிற்சியின்போது சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கி அவர் கவுரவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726509
----
(रिलीज़ आईडी: 1726560)
आगंतुक पटल : 283