குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி பிரக்ரிதிக் பெயின்ட் பெயரில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை

प्रविष्टि तिथि: 11 JUN 2021 3:13PM by PIB Chennai

காதி பிரக்ரிதிக் பெயின்ட் என்ற பெயரில் போலி வண்ணப்பூச்சுக்களை விற்ற நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

பசுஞ் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தனித்துவமான வண்ணப்பூச்சை காதி நிறுவனம் தயாரித்தது. இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தார். பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் ஏற்படாத இந்த வண்ணப்பூச்சு மக்களிடையே பிரபலம் அடைந்தது.

இதையடுத்து காசியாபாத்தைச் சேர்ந்த ஜேபிஎம்ஆர் என்ற நிறுவனம் காதி பிரக்ரிதிக் பெயின்ட்என்ற பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தி வண்ணப்பூச்சுகளை விற்பனை செய்தது. இதே பெயரில் இணையதளம் மற்றும் இ-மெயில் முகவரியையும் உருவாக்கியது.

இதை எதிர்த்து காதி சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஜேபிஎம் ஆர் நிறுவனத்தின் உரிமையாளர் உமேஷ் பால், தனது அனைத்து விற்பனை நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிறுவனத்தின் இணையதளம் மற்றும் இ-மெயில் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

http://delhihighcourt.nic.in/dhcqrydisp_O.asp?pn=119319&yr=2021

*****************


(रिलीज़ आईडी: 1726278) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Bengali , हिन्दी , Punjabi , English , Telugu