எரிசக்தி அமைச்சகம்

என்எச்பிசி நிறுவனம் 2020-21-ம் நிதியாண்டில் மிக அதிகபட்சமாக ரூ.3233 கோடி லாபம் ஈட்டியுள்ளது

Posted On: 11 JUN 2021 12:33PM by PIB Chennai

நாட்டின் முன்னணி நீர்மின்சக்தி நிறுவனமான என்எச்பிசி,  2020-21ம் நிதியாண்டில், மிக அதிகபட்சமாக ரூ.3233 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 

தேசிய நீர்மின்சக்தி கார்பரேஷன் (என்எச்பிசி) மின்துறை அமைச்சகத்தின் ‘மினி ரத்னா’ பிரிவில் உள்ளது. இந்நிறுவனம், 2020-21ம் நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதற்கு, நேற்று நடந்த கூட்டத்தில் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  
 
2020-21ம் நிதியாண்டில் வரி செலுத்தியபின், என்எச்பிசி நிறுவனம் ரூ.3233.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.3007.17 கோடி நிகர லாபம் ஈட்டியது.  2020-21ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.8506.58 கோடி. இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.8,735.15 கோடி லாபம் ஈட்டியது. 

2020-21ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3582.13 கோடி. 2019-20ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,344.91 கோடி. 2020-21ம் ஆண்டில் இந்தக் குழுமத்தின்  மொத்த வருமானம் ரூ.10,705.04 கோடி. 2019-20ம் ஆண்டில் இந்த குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.10,776.64 கோடியாக இருந்தது. 

கொரோனா  தொற்றுக்கு இடையிலும், என்எச்பிசி நிறுவனத்தின் மின் நிலையங்கள், 2020-21ம் ஆண்டில் 24471 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன.   

கடந்த மார்ச் மாதத்தில் இந்நிறுவனம், பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.1.25 வழங்கியது. தற்போது கூடுதலாக ஒவ்வொரு பங்குக்கும் 35 பைசா ஈவுத் தொகை அளிக்க இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மொத்த ஈவுத் தொகையாக 2020-21ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.1607.21 கோடி வழங்கியுள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.1506.76 கோடி ஈவுத் தொகை வழங்கியது. என்எச்பிசி நிறுவனம், தற்போது, சுமார் ஏழு லட்சம் பங்குதாரர்களை வைத்துள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726168

 *******************
 



(Release ID: 1726204) Visitor Counter : 169