சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய அரசின் இலவச தொலை மருத்துவ சேவையான ‘இசஞ்ஜுவனி’ 60 லட்சம் ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளது

Posted On: 10 JUN 2021 5:41PM by PIB Chennai

மற்றுமொரு மைல்கல்லை கடந்துள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் இலவச தொலைமருத்துவ சேவையானஇசஞ்ஜுவனி’ 60 லட்சம் ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளது. 375 இணையவழி வெளி நோயாளி துறைகளுடன் செயல்பட்டு வரும் இந்த சேவையின் வாயிலாக 40,000-க்கும் அதிகமான நோயாளிகள் 1,600-க்கும் அதிகமான மருத்துவர்களிடம் இருந்து தினமும் ஆலோசனைகளை பெறுகிறார்கள்.

31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இந்த தேசிய தொலைமருத்துவ சேவை தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,55,000 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் செயல்படுத்துவதற்கான மருத்துவர்களுக்கிடையேயான தொலைமருத்துவ தளமாகஇசஞ்ஜுவனியை 2019 நவம்பரில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திட்டமிட்டது.

2020 மார்ச்சில் கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் உள்ள வெளிநோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்ட நிலையில், மேம்பட்ட கணினியியல் மேம்பாட்டிற்கான மையத்துடன் (மொஹாலி) இணைந்து இச்சேவையை துரிதமாக அமைச்சகம் தொடங்கியது.

பாதுகாப்பு அமைச்சகமும் இதில் பங்கேற்றதன் மூலம் 100 மூத்த மருத்துவர்கள் நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சேவையாற்றினர்.

ஆலோசனைகளை பெறுவதில் முன்னணி 10 மாநிலங்களின் விவரம் வருமாறு: ஆந்திரப் பிரதேசம் (1219689), தமிழ்நாடு (1161987), கர்நாடகா (1056447), உத்தரப் பிரதேசம் (952926), குஜராத் (267482), மத்தியப் பிரதேசம் (264364), பிகார் (192537), மகாராஷ்டிரா (177629), கேரளா (173734) மற்றும் உத்தரகாண்ட் (134214).

https://esanjeevaniopd.in/ எனும் இணைய இணைப்பு மற்றும் ஆண்டிராய்ட்டில் இசஞ்ஜுவனி சேவை கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725993

-----



(Release ID: 1726064) Visitor Counter : 286