பாதுகாப்பு அமைச்சகம்
பூடான் வீரருக்கு மரியாதைக்குரிய மோட்டிவேஷனல் கோப்பை, இந்திய ராணுவ அகாடெமியில் வழங்கப்பட்டது
Posted On:
10 JUN 2021 4:07PM by PIB Chennai
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடெமியில் நடைபெற்ற சீர்மிகு விழாவில் பூடான் முடியரசை சேர்ந்த வெளிநாட்டு வீரரான இளநிலை அதிகாரி கின்லே நோர்புவுக்கு மரியாதைக்குரிய மோட்டிவேஷனல் கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அகாடெமியில் வழங்கப்பட்ட பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு இப்பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயல் பூடான் ராணுவத்தில் அவர் இணைக்கப்படுகிறார்.
ஒன்பது நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற 84 வெளிநாட்டு வீரர்களில் நோர்புவும் ஒருவர் ஆவார். 2021 ஜூன் 12 அன்று இவர்கள் பயிற்சியை நிறைவு செய்கிறார்கள்.
சேவை பிரிவுகள், வெளிப்புற பயிற்சிகள் மற்றும் புத்தக ஆய்வு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த எஹ்ஷனுல்லா சாடத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
தனது சிறப்பான பயிற்சி முறைகளுக்காக உலகெங்கும் இந்தியா ராணுவ அகாடெமி புகழ்பெற்றுள்ளது. இங்கு பயிற்சி பெறும் நான்கு வீரர்களில் ஒருவர் வெளிநாட்டவர் ஆவார். வீரர்களின் திறனை மதிப்பிடும் இந்த விருதுகள், பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725958
----
(Release ID: 1725989)
Visitor Counter : 212