சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதாரம் மற்றும் எரிசக்தித்தளத்தின் செயல்பாடு மீதான உலக சுகாதார அமைப்பின் உயர் நிலைக் கூட்டணியின் முதலாவது கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 10 JUN 2021 11:41AM by PIB Chennai

சுகாதாரம் மற்றும் எரிசக்தித் தளத்தின் செயல்பாடு மீதான உலக சுகாதார அமைப்பின் உயர்நிலைக் கூட்டணியின் முதலாவது கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி வாயிலாக நேற்று உரையாற்றினார். உலக வங்கி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை முதலிய அமைப்புகளின் தேசியத் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் உரை பின்வருமாறு:

மனித உயிர்களைக் காக்கவும், உலகம் முழுவதும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான அசாதாரண நடவடிக்கைகளில் அரசும் குடிமக்களும் ஈடுபடும் வகையில் கொவிட்-19 பெருந்தொற்று முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. பெருந்தொற்று மற்றும் அதன் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்படும் எண்ணற்ற நடவடிக்கைகள் பல்வேறு துறைகளில் பிரம்மாண்ட சார்புநிலையை எடுத்துரைக்கிறது. செயல்திறன் வாய்ந்த மற்றும் நிலையான சேவைகளை வழங்குவதற்காக, நமது கொள்கைகளில், துறைகள் இடையேயான இணைப்பு பிரதிபலிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

மனித ஆரோக்கியத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் பற்றி பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பலதரப்பட்ட நோக்கங்களுடன் பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் மீதான தேசிய செயல் திட்டம் என்ற நிபுணர் குழுவை எங்களது அரசு உருவாக்கியது. கண்டறியப்பட்ட பருவநிலை சார்ந்த நோய்கள் பற்றிய குறிப்பிட்ட சுகாதார செயல்திட்டங்கள் மற்றும் 'ஒரே ஆரோக்கியம்' ஆகியவற்றை உள்ளடக்கிய அறிக்கையை இந்த தேசிய நிபுணர்குழு அண்மையில் கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது.

பசுமை மற்றும் பருவநிலை நெகிழ்திறன் மருத்துவ வசதிகளைக்கருத்தில் கொண்டு கடந்த 2017-ஆம் ஆண்டு மாலே பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டதுடன், எந்தவிதமான பருவ நிகழ்வையும் எதிர்கொள்ளும் வகையில் பருவநிலை- நெகிழ்திறன் மருத்துவ வசதிகளை ஊக்குவிக்க சம்மதம் தெரிவித்தது. குறைந்த கரியமில வெளியீடுகள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி உடனான பொருளாதார மேம்பாட்டிற்கான புதிய மாதிரியின் முன்னோடியாகத் திகழும் தனித்துவம் வாய்ந்த நிலையில் இந்தியா தற்போது உள்ளதுஉலகளாவிய மருத்துவ செயல்களை அடைவதும் முக்கிய தீர்மானிக்கும் அம்சங்களுள் ஒன்று.

மருத்துவம் மற்றும் எரிசக்தித் துறைகளில் திறனை மேலும் வலுப்படுத்துவதற்காக வளங்களை ஏற்படுத்துவதற்கு  நிலையான அரசியல் மற்றும் நிதியில் அதிக ஈடுபாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று நாங்கள் கருதுகிறோம். கொவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய காலக்கட்டத்திற்கு நாடுகள் தயாராகி வரும் வேளையில், உலகளாவிய நிலையை மீட்டமைப்பதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இலக்குகளுடன் கூடிய பசுமை ஊக்குவிப்புத் திட்டங்கள், பல்வேறு நாடுகளில் எரிசக்தி மாற்றங்களை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை நிலைநாட்டவும் உதவிகரமாக இருக்கும். இந்தக் கூட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு நடவடிக்கைகள் பசுமையான மற்றும் ஆரோக்கியமான பூமியை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725863

------

 


(Release ID: 1725948) Visitor Counter : 267