சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 145-வது நாள்: 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது

Posted On: 09 JUN 2021 8:08PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் முக்கிய மைல்கல்லை இந்தியா இன்று கடந்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 24 கோடிக்கும் (24,24,79,167) அதிகமான தடுப்பூசிகளை நாடு இதுவரை செலுத்தி உள்ளது.

பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் சரியான கொவிட் நடத்தைமுறை ஆகியவற்றோடு, பெருந்தொற்றின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான இந்திய அரசின் விரிவான திட்டத்தின் முக்கியத்தூணாக தடுப்பு மருந்து வழங்குதல் உள்ளதுதாராளமயமாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து வழங்கல் திட்டம் 2021 மே 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

18-44 வயது பிரிவில் 19,24,924 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 86,450 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர்.  37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 3,38,08,845 பேர் முதல் டோசையும், 4,05,114 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

பிகார், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 1978560 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 4674 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 45784 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 145-வது நாளில் (2021 ஜூன் 9), 31,31,759 டோஸ்கள் வழங்கப்பட்டன. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 28,37,572 பேருக்கு முதல் டோசும், 2,94,187 நபர்களுக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டன. இறுதி அறிக்கைகள் இன்றிரவு நிறைவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725760

 

----


(Release ID: 1725793) Visitor Counter : 225