அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இமாலயப் பகுதிகளில் உள்ள ஒளியியல் சாதனங்களின் மூலம் கருப்பு கரிமத்தின் மதிப்பீடு

Posted On: 07 JUN 2021 3:46PM by PIB Chennai

கரியமில வாயுவிற்குப் பிறகு புவி வெப்பமடைதலில் முக்கிய மாசுவாக உள்ள கருப்பு கரிமத்தை இமாலயப் பகுதிகளில் உள்ள ஒளியியல் சாதனங்களின் மூலம் இனி துல்லியமாக மதிப்பிட முடியும். இமாலய பகுதிக்குட்பட்ட பெருந்திறள் உறிஞ்சுதல் பிரிவு (எம்ஏசி) என்ற அளவுகோலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பருவநிலை மாதிரிகளையும் செயல்திறனையும் இது மேம்படுத்தும்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் கண்காணிப்பு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஆர்ஐஇஎஸ்) விஞ்ஞானிகள், தில்லி பல்கலைக்கழகம், கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம், விண்வெளி இயற்பியல் ஆய்வகம், இஸ்ரோ ஆகியவற்றின் விஞ்ஞானிகளுடன் இணைந்து இமாலயாவின் மையப் பகுதிகளில் முதன் முறையாக கருப்புக் கரிமம் மற்றும் அடிப்படை கரிமம் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றின் மாதாந்திர மற்றும் அலைநீளத்தின் அடிப்படையில் எம்ஏசி மதிப்புகளை மதிப்பீடு செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725060

------



(Release ID: 1725140) Visitor Counter : 160