எரிசக்தி அமைச்சகம்

என்எச்பிசி மற்றும் ஜேகேஎஸ்பிடிசி ஆகியவை கூட்டு முயற்சி நிறுவனம் ‘ரேட்லே ஹைட்ரோஎலக்ட்ரிக் பவர் கார்பரேஷன் நிறுவனத்துடன் ஒருங்கிணைப்பு

Posted On: 07 JUN 2021 3:13PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில், 850 மெகா வாட் ரேட்லே நீர்மின்சார திட்டத்தை அமல்படுத்துவதற்காக இந்தியாவின் முன்னணி நீர்மின் சக்தி நிறுவனமான என்எச்பிசி,  ‘ரேட்டில் ஹைட்ரோஎலக்ட்ரிக் பவர் கார்பரேஷன் லிமிடெட் என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளதுஇந்த கூட்டு முயற்சி நிறுவனம், என்எச்பிசி மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில மின் மேம்பாட்டு கார்பரேசன் நிறுவனத்துடன் ( JKSPDC ) 01.06.2021ம் தேதி இணைக்கப்பட்டுள்ளதுஇந்த நிறுவனங்கள் முறையே 51 சதவீதம் மற்றும் 49 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தின் செனாப் ஆற்றில், இந்த 850 மெகா வாட் ரேட்லே நீர்மின்சார திட்டம்  அமைக்கப்படுகிறது.

இந்த முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜேகேஎஸ்பிடிசி, என்எச்பிசி மற்றும் முந்தைய ஜம்மு காஷ்மீர் அரசு  இடையே  03.02.2019ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

மேலும், ரேட்லே நீர்மின்சக்தி திட்டத்தை அமல்படுத்துவதற்கு, துணை புரிந்துணர்வு ஒப்பந்தம்மத்திய மின்துறை மற்றும் புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே.சிங், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா ஆகியோர் முன்னிலையில்  கடந்த ஜனவரி 3ம் தேதி கையெழுத்திடப்பட்டது.

இந்த ரேட்லே நீர் மின் சக்தி திட்டம் கட்டுமானத்துக்கு, 2018 நவம்பர் மதிப்பீட்டின் படி ரூ.5281.94 கோடி முதலீடு செய்வதாக மத்திய மின்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளதுஅதைத் தொடர்ந்துரேட்லே ஹைட்ரோஎலக்ட்ரிக் பவர் கார்பரேஷன் நிறுவனத்தை இணைக்கும் ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725053

 

-----



(Release ID: 1725076) Visitor Counter : 176