சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தொற்று பற்றிய அண்மைத் தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUN 2021 9:20AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 நாட்களில் மிகவும் குறைந்து 1 லட்சமாகப் பதிவாகியுள்ளது.
தற்போது நம் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14,01,609 ஆக சரிந்துள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 76,190 குறைந்துள்ளது.
இதுவரை மொத்தம் 2,71,59,180 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,74,399 பேர் குணமடைந்தனர்.
தொடர்ந்து 25-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 93.94%மாக உயர்ந்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி வீதம் 6.21% ஆகும்.
தொடர்ந்து 14-வது நாளாக அன்றாட பாதிப்பு வீதம் 10 %க்கும் குறைவாக, 6.34% ஆக உள்ளது.
இதுவரை 36.6 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.27 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724998
------
(வெளியீட்டு அடையாள எண்: 1725050)
வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam