தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘ஒயாசிஸ் ஆப் ஹோப்’ என்ற ஆன்லைன் திரைப்பட விழாவை நடத்துகிறது திரைப்படப் பிரிவு

प्रविष्टि तिथि: 04 JUN 2021 12:05PM by PIB Chennai

சுற்றுச்சூழல் முறை மறுசீரமைப்பு என்ற கருப்பொருளுடன், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை (ஜூன் 5ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பிலும், சுற்றுச்சூழல் அழிவதை தடுத்து நிறுத்தி, மீண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஏற்படுத்துவதுதான் இதன்  நோக்கம்

மீண்டும் கற்பனை செய்தல், மீள்உருவாக்கம், மீட்டெடுப்பு ஆகியவைதான் இந்தாண்டு கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த உணர்வை வழங்குவதற்காக, ‘ஒயாசிஸ் ஆப் ஹோப்’ (நம்பிக்கையை ஏற்படுத்தும் பாலைவனச்சோலை) என்ற பெயரில் ஆன்லைன் திரைப்படவிழா ஜூன் 5 மற்றும் ஜூன் 6ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

இந்த 2 நாள் திரைப்பட விழாவில் சூற்றுச்சூழலை மீட்பது, இயற்கையுடன் இணைந்து வாழும் வழிமுறைகள், மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை மீட்டெடுப்பது  தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்.

இந்த திரைப்படங்களை திரைப்பட பிரிவின் இணையதளம் மற்றும் யூ டியூப் சேனலில் காணலாம். இந்த திரைப்படவிழாவின் படங்கள் www.filmsdivision.org/ “Documentary of the Week” and https://www.youtube.com/user/FilmsDivision ஆகிய இணையதளங்களில் 2021 ஜூன் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=  1724320

 

------

 


(रिलीज़ आईडी: 1724395) आगंतुक पटल : 278
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu