பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
கொவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
03 JUN 2021 6:19PM by PIB Chennai
கொவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை ஜேஜே சட்டம், 2015-ன் விதிகளை பின்பற்றி உறுதி செய்யுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராம் மோகன் மிஸ்ரா இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில், அத்தகைய அனைத்து குழந்தைகளையும் அரசு திட்டங்கள் வழங்கியுள்ள பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொய்வின்றி எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தொற்றின் போது குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக, கவனத்துடன் திட்டமிட்டு அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து மட்டங்களிலும் உள்ள தொடர்புடைய அரசு துறைகள் மற்றும் இதர பங்குதாரர்கள் இத்தகைய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து, பாதிக்கப்படக்கூடிய எந்த குழந்தையும் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
*******************
(வெளியீட்டு அடையாள எண்: 1724182)
வருகையாளர் எண்ணிக்கை : 215