நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கடந்த வருடத்தை விட 12.70% அதிக கோதுமை கொள்முதல், 44.12 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
Posted On:
02 JUN 2021 5:04PM by PIB Chennai
தற்போதைய ராபி சந்தைப்படுத்துதல் பருவம் 2021-22-ன் போது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், தில்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கோதுமை கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 363.61 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜூன் 1 வரை 409.80 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது வரை செய்யப்பட்டதில் இது தான் அதிக கொள்முதல் ஆகும். முந்தைய அதிக கொள்முதலாக 2020-21-ன் ராபி பருவத்தில் செய்யப்பட்ட 389.92 லட்சம் மெட்ரிக் டன் இருந்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ 80,936.19 கோடியுடன் சுமார் 44.12 லட்சம் விவசாயிகள் நடப்பு ராபி சந்தைப்படுத்துதல் பருவ கொள்முதல் நடவடிக்கைகளினால் ஏற்கனவே பலனடைந்துள்ளனர்.
தற்போதைய காரிப் சந்தைப்படுத்துதல் பருவம் 2020-21-ன் போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 726.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு மே 27 வரை 796.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் (காரிப் பயிர் 706.69 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் ராபி பயிர் 89.77 லட்சம் மெட்ரிக் டன்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ 1,50,370.25 கோடியுடன் சுமார் 118.16 லட்சம் விவசாயிகள் நடப்பு காரிப் சந்தைப்படுத்துதல் பருவ கொள்முதல் நடவடிக்கைகளினால் ஏற்கனவே பலனடைந்துள்ளனர். நெல் கொள்முதல் இதுவரை இல்லாத வகையில் மிகவும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய அதிக அளவாக 2019-20-ல் கொள்முதல் செய்யப்பட்ட 773.45 லட்சம் மெட்ரிக் டன் இருந்தது.
மேலும், மாநிலங்களிலிருந்து வந்திருந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் 107.81 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2021 ஜூன் 1 வரை, 7,29,854.74 மெட்ரிக் டன் எடையிலான தானியங்களை ரூபாய் 3,818.78 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 4,32,323 விவசாயிகள் பயனடையும் வகையில் தனது முகமைகள் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ளது.
அதே போன்று, 5089 மெட்ரிக் டன் கொப்பரை கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 3961 விவசாயிகளிடம் இருந்து ரூபாய் 52.40 கோடி குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1723780
*****************
(Release ID: 1723820)
Visitor Counter : 239