ரெயில்வே அமைச்சகம்

ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தலா 2000 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் : ரயில்கள் மூலம் விநியோகம்

Posted On: 01 JUN 2021 4:14PM by PIB Chennai

இந்திய ரயில்வே இது வரை பல மாநிலங்களுக்கு  1357-க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் 22,916 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது.

இதுவரை 334 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனது பயணங்களை முடித்து பல்வேறு மாநிலங்களுக்கு நிவாரணம் அளித்துள்ளன.

ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் தெலங்கானா போன்ற தென் மாநிலங்கள்  தலா 2000 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்ஸிஜனை ரயில்கள் மூலம் பெற்றுள்ளன. தற்போது 6 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 32 டேங்கர்களில் 500 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்ஸிஜன்களை கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

இதுவரை, தமிழகம் 2190, மகாராஷ்டிரா 614, கர்நாடகா 2440, ஆந்திரா 2125, கேரளா 380, தெலங்கானா  2062 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பெற்றுள்ளன. 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, கோவை, மதுரை உட்பட 15 மாநிலங்களில் 39 நகரங்களில் ஆக்ஸிஜன் டேங்கர்களை ரயில்கள் இறக்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723411

*****************



(Release ID: 1723463) Visitor Counter : 222