ரெயில்வே அமைச்சகம்

மே மாதத்திலேயே மிக அதிகமாக 114.8 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு இந்திய ரயில்வே சாதனை

Posted On: 01 JUN 2021 3:05PM by PIB Chennai

கொவிட் சவால்களுக்கு இடையேயும், 2021, மே மாதத்திற்கான சரக்கு கையாள்வதின் அளவு மற்றும் போக்குவரத்தில் இந்திய ரயில்வே தொடர்ந்து உச்சத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

 

மே மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான சரக்குகளை இந்திய ரயில்வே கையாண்டுள்ளது.

 

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தை (104.6 மெட்ரிக் டன்) விட இந்த ஆண்டு மே மாதத்தில் (114.8 மெட்ரிக் டன்) 9.7% கூடுதலான சரக்குகள் கையாளப்பட்டன.

 

54.52 மில்லியன் டன் நிலக்கரி, 15.12 மில்லியன் டன் இரும்புத்தாது, 5.61 மில்லியன் டன் உணவு தானியங்கள், 3.68 மில்லியன் டன் உரங்கள், 3.18 மில்லியன் டன் கனிம எண்ணெய், 5.36 மில்லியன் டன் சிமெண்ட், 4.2 மில்லியன் டன் உருண்டைக் கற்கள் முதலிய பொருட்கள், மே மாதத்தில் ரயில்களில் கொண்டு செல்லப்பட்டன.

 

சரக்குகளைக் கையாண்டு அதன் வாயிலாக 2021 மே மாதத்தில் இந்திய ரயில்வே ரூ. 11604.94 கோடியை ஈட்டியுள்ளது.

 

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்கு ரயில் சென்று மீண்டும் திரும்பும் நேரம் மே மாதத்தில் 26% மேம்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் 6.46 நாட்களாக இருந்த சுழற்சி நேரம், இந்த ஆண்டு மே மாதத்தில் 4.81 நாட்களாகப் பதிவாகியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723389



(Release ID: 1723414) Visitor Counter : 145