பாதுகாப்பு அமைச்சகம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்
Posted On:
01 JUN 2021 1:38PM by PIB Chennai
ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு பீட்டர் டட்டனுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரண்டு நாடுகள் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு அமைச்சர்களும், ஆய்வு செய்தனர். தற்போதைய பிராந்திய நிலவரம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையேயான கூட்டுறவு, கடந்த 2020 ஜூன் மாத்தில் ஒருங்கிணைந்த உத்தி கூட்டுறவாக மேம்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு கூட்டுறவு மேம்பட்டுள்ளதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர். இதில் மலபார் கூட்டுப் பயிற்சியில் ஆஸ்திரேலியா பங்கேற்றது முக்கியமான மைல்கல்.
இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு உறவுகள் வளர்வது குறித்து இரண்டு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர். இருதரப்பு ராணுவ உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்து, இருநாட்டு பாதுகாப்பு படைகள் இடையேயான நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க உறுதிபூண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவிலான 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்தவும், இரு அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில், இந்தியாவுக்கு, ஆஸ்திரேலியா உதவியதற்கு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.
இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காண: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723359
***********
(Release ID: 1723381)
Visitor Counter : 212