ரெயில்வே அமைச்சகம்
தமிழகத்துக்கு 1808 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகித்தன ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
Posted On:
30 MAY 2021 2:37PM by PIB Chennai
இந்திய ரயில்வே பல மாநிலங்களுக்கு இதுவரை 1274க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது.
இதுவரை 313 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன.
தற்போது 5 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 23 டேங்கர்களில் 406 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் சென்று கொண்டிருக்கின்றன.
தற்போதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, தில்லிக்கு 5476, ஹரியானாவுக்கு 2023, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 2115, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 1808, ஆந்திராவுக்கு 1738, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 380, தெலங்கானாவுக்கு 1858, ஜார்கண்ட்டுக்கு, 38, அசாமுக்கு 240 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிகப்பட்டுள்ளன.
இன்று இரவு இன்னும் பல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722887
------
(Release ID: 1722935)
Visitor Counter : 223