மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

யுவா-இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டம் அறிமுகம்

Posted On: 29 MAY 2021 1:32PM by PIB Chennai

வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்  வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை  கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை இன்று அறிமுகப்படுத்தியது.

யுவா (இளம், வளர்ந்து வரும் மற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள்) திட்டத்தின் அறிமுகம், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதுமாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் முயற்சியாகும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில்விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப் பற்றி எழுதுமாறு ஜனவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

கல்வி அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தும் முகமையாக செயல்படும் நேஷனல் புக் டிரஸ்ட், பகுதி வாரியான இந்த திட்டத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடுவதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பும் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

•        அகில இந்திய அளவில் https://www.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

•        வெற்றியாளர்கள், ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிவிக்கப்படுவார்கள்.

•        பிரபல‌ எழுத்தாளர்களும், வழிகாட்டிகளும், இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.

•        அவர்களது வழிகாட்டுதலின்படி, டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் படைப்புகள் வெளியீட்டிற்குத் தயார் செய்யப்படும்.

•        இவ்வாறு வெளியிடப்படும் புத்தகங்கள், தேசிய இளைஞர் தினமான 2022, ஜனவரி 12 அன்று அறிமுகப்படுத்தப்படும்.

•        இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளருக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு மாதம் வீதம் மொத்தம் ரூ. 50,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722644

-----


(Release ID: 1722763) Visitor Counter : 518