பாதுகாப்பு அமைச்சகம்

பாலசூரில் புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணியை தொடர்கிறது இந்திய கடற்படை

Posted On: 28 MAY 2021 10:50AM by PIB Chennai

ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தின் சதார் பகுதியில் உள்ள பரிக்கி கிராமம், யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையின் பேரிடர் நிவாரண குழு கடந்த 27ம் தேதி ஈடுபடுத்தப்பட்டது.

பரிக்கி கிராமத்தில் உள்ள புயல் நிவாரண முகாமில் கடற்படை குழு சமுதாய சமையல் கூடம்  அமைத்தது. இங்கு உணவு சமைக்கப்பட்டு, அருகில் உள்ள மீனவர் கிராமங்களில் 700க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  இந்த சமுதாய சமயல் கூடம் வெற்றிகரமா செயல்படுவதால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. பேரிடர் நேரத்தில் சரியான நேரத்தில் உதவி வழங்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் கடற்படை குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

மற்றொரு கடற்படை குழு ஒடிசாவின் வடக்கு பகுதியில் உள்ள தலசாரி, போக்ராய், சந்திரமணி ஆகிய  மீனவ கிராமங்களுக்க  நிவாரண பொருட்களை வழங்க இன்று செல்லவுள்ளது.

கடற்படை குழுவினர்  பாலசூர் ரோடுகளில் மரங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.  பத்ரக் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க,  4 கடற்படை கப்பல்கள் நிவாரண பொருட்களுடன் தம்ரா பகுதிக்கு சென்றுள்ளது.   இந்த கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள், பாலசூர் மாவட்டத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள்  100 உணவு பொட்டலங்கள், 300 சமையல் பொருட்கள் பொட்டலங்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக நிவாரண குழுவிடம் வழங்கின.

*****************



(Release ID: 1722446) Visitor Counter : 134